இந்தியன் சூப்பர் லீக்கில் எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் முழு பட்டியல் இதோ!!
இந்தியன் சூப்பர் லீக் தொடர் 13 அணிகளுக்கு இடையே கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா 2 லீக் போட்டிகளில் விளையாடி வருவதை நாம் அறிவோம்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் நடப்பு இந்தியன் சூப்பர் லீக் தொடரில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து பஞ்சாப் அணி 2ம் இடத்திலும், ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் மோகன் பாகன் முறையே 3 மற்றும் 4ம் இடங்களில் உள்ளன. மேலும் கோவா அணி 5 வது இடத்திலும் , நார்த் ஈஸ்ட் யுனைடெட் 6 வது இடத்திலும் உள்ளது. இப்பட்டியலில் சென்னையின் எப்.சி 1 வெற்றி, 1 தோல்வியுடன் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


























