
சொத்து வரி, தொழில் வரி செலுத்த இன்றே இறுதி நாள்…!! செலுத்தாதவர்களுக்கு 1% அபராதம் விதிக்கப்படும் என தகவல்
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டிற்கு இருமுறை சொத்துவரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. அதாவது, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் அரையாண்டிற்கும், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இரண்டாவது அரையாண்டிற்கும் என ஆண்டிற்கு இருமுறை வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில், இன்றைய தினம் இரண்டாவது அரையாண்டின் இறுதி நாள் என்பதால், மக்கள் விரைந்து சொத்துவரி மற்றும் தொழில் வரிகளை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அறிவியல் துறையை மாற்றியமைக்கும் அமெரிக்கா.. புதிய ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு ..
மேலும், வரி செலுத்தாத மக்களின் வசதிக்காக இன்று மற்றும் நாளை என அரசு விடுமுறை தினங்களில் கூட வரி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களுடைய வரிகளை இ -சேவை மையம், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் செலுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் வரி செலுத்தாதவர்களுக்கு 1% அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























