
தமிழகத்தின் 40 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு…!! நாளை முதல் அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்
தமிழகத்தில் தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. இதில், முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் கனரக வாகனங்களுக்கான சுங்கக்கட்டணத்தை ரூ. 5 முதல் ரூ. 25 வரை உயர்த்த உள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது. அதன்படி, சென்னையை அடுத்துள்ள வானகரம், சூரப்பட்டு, ஆத்தூர், நல்லூர், பரனூர் மற்றும் பட்டறை பெரும்புதூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப் படும் சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
மேலும், தற்போது நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், அதாவது இன்று இரவு 12 மணியில் இருந்து இந்த கட்டண உயர்வானது அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வாகனங்களின் வகையை பொறுத்து, கட்டண உயர்வு வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தின் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து இந்த சுங்க கட்டண உயர்வானது அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.























