புதின் – டிரம்ப் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு.. மீண்டும் கோபத்தின் உச்சத்தில் டிரம்ப்..
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான நீண்டகால மோதலைக் நிறுத்த அமெரிக்கா அரசு தரப்பில் சமீப காலமாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் நிர்வாகத்தின் நியாயத்தன்மையை கேள்வி கேட்டதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது தான் “மிகவும் கோபமாக” இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் NBC ஊடகத்திற்கு அளித்த சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். இந்நிலையில் அதிபர் புதின் குறித்து டிரம்ப் கூறிய மற்றொரு கருத்து பற்றி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை (29-03-2025), உக்ரைனில் ஒரு இடைக்கால நிர்வாகத்தை நிறுவ புதின் அந்நாட்டு அரசிற்கு அழைப்பு விடுத்தார், இது அடிப்படையில் ஜெலன்ஸ்கி வெளியேற்றக்கூடும் என்று AFP செய்தி வெளியிட்டுள்ளது”. மேலும், ஜெலன்ஸ்கியை நீக்கி இடைக்கால அரசை நியமிக்க புதின் கூறிய கருத்தால் தான் கோபம் அடைந்திருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். பின்னர் புதினுடன் எனக்கு “மிகவும் நல்ல உறவு” இருப்பதாகவும், “அவர் சரியானதைச் செய்தால் கோபம் விரைவாகக் சரியாகிவிடுகிறது” என்றும் கூறியுள்ளார்.


























