இந்தியாவின் அறிவியல் துறையை மாற்றியமைக்கும் அமெரிக்கா.. புதிய ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு ..
இந்தியாவின் அறிவியல் துறையை மாற்றியமைக்கும் அமெரிக்கா.. புதிய ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு ..
2008 ஆம் ஆண்டு, இந்தியா-அமெரிக்க இடையே முதல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் இந்தியாவில் எந்த ஒரு அமெரிக்க அணு உலையும் இதுவரை நிறுவப்படவில்லை. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “இந்தியாவில் அணு உலைகளை உருவாக்குவதற்கும், வடிவமைப்பதற்கும் அமெரிக்கா ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு டிரம்ப் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவின் TATA, L&T நிறுவனங்களுக்கு 300 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு உலை தொழில்நுட்பத்தை அமெரிக்க அரசு பரிமாற்றம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க எரிசக்தி துறை (DoE) மார்ச் 26 அன்று ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது”.