தமிழகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை…!! அரசு போக்குவரத்து கழகம் கொடுத்த சப்ரைஸ்..!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், சென்னையில் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக தங்கி வருகின்றனர். அவர்கள், பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் தற்போது 5 நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ளது. அதாவது, தமிழகத்தில் நாளை (10.4.2025) அன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை ஆகும். அதே போல், 12 மற்றும் 13 ம் தேதி வார விடுமுறை நாட்கள், அத்துடன் 14 ஆம் தேதி தமிழ் வருட பிறப்பாகும். எனவே, வெள்ளிக்கிழமை (11.4.2025) அன்று மட்டும் விடுமுறை எடுத்தால் நமக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
வர்த்தக போரை தொடங்கிய சீனா மற்றும் அமெரிக்கா.. நெருக்கடியில் மற்ற உலக நாடுகள்..!!
அந்த வகையில், இந்த தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு, மக்கள் தங்கள் சொந்த ஊர்கள் செல்ல ஏதுவாக ஏப் 9,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தமாக 1680 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, 1095 சிறப்பு பேருந்துக்கள் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


























