வர்த்தக போரை தொடங்கிய சீனா மற்றும் அமெரிக்கா.. நெருக்கடியில் மற்ற உலக நாடுகள்..!!
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவின் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விகிதங்களை உயர்த்தினர். அதன்படி 50 க்கும் அதிகமான நாடுகள் மீது 11 – 50 % வரையிலான பதில் வரிகள் இன்று (09-04-2025) முதல் அமல்படுத்தப்பட்டது. இதை குறித்து கேள்வி எழுப்ப இந்தியா உள்ளிட்ட நாடுகள் தயக்கம் காட்டி வரும் சூழலில் சீனா, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 34 % வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.
இதனால் கோபமடைந்த டிரம்ப், “சீனா உடனடியாக தனது வரியை திரும்பப் பெறவில்லை என்றால் பதிலுக்கு 50 % கூடுதல் வரி விதிப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் அமெரிக்க பொருட்கள் மீது விதித்த வரியை திரும்ப பெற சீனாவிற்கு கொடுக்கப்பட்ட 24 மணி கால அவகாசம் முடிந்தும் சீனா அரசிடம் இருந்து பதில் வராத நிலையில் இன்று முதல் 50% கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வரும் என அமெரிக்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் சீனப் பொருட்கள் மீதான வரி 104% ஆக அமெரிக்காவில் உயர்ந்துள்ளது”.


























