UGC NET June 2026:
பாடவாரியான விரிவான தேர்வு கால அட்டவணை வெளியீடு! உங்களுக்கான ஷிப்ட் எது?
தேசிய தேர்வு முகமை (NTA) திட்டமிட்டபடி தேர்வு மைய நகர அறிவிப்பை (City Intimation Slip) வெளியிட்டதைத் தொடர்ந்து, 87 பாடங்களுக்கான விரிவான பாடவாரியான தேர்வு கால அட்டவணையை (Subject-Wise Schedule) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது வரும் ஜூன் 22 முதல் ஜூன் 30, 2026 வரை கணினி வழித் தேர்வாக (CBT – Computer Based Test) நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்ட தகுதித் தேர்வின் முழுமையான கால அட்டவணை மற்றும் ஷிப்ட் விவரங்களை இங்கு விரிவாகப் பார்ப்போம் .
UGC NET ஜூன் 2026:
முக்கியப் பாடங்களின் தேர்வுத் தேதிகள்
(Subject-Wise Timeline)
தேர்வுகள் தினமும் இரண்டு ஷிப்டுகளாக (Shift 1: காலை 9:00 – 12:00 |Shift 2: மதியம் 3:00 – மாலை 6:00) நடத்தப்படவுள்ளன . முக்கியப் பாடங்களுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இதோ:
-
- ஜூன் 22, 2026 (திங்கள்கிழமை) –
Shift I:Tamil (தமிழ்), Geography (புவியியல்). - ஜூன் 22, 2026 (திங்கள்கிழமை) –
Shift II: Computer Science and Applications (கணினி அறிவியல்). - ஜூன் 24, 2026 (புதன்கிழமை) –
Shift I: Political Science (அரசியல் அறிவியல்). - ஜூன் 24, 2026 (புதன்கிழமை) –
Shift II: Commerce (வணிகவியல்). - ஜூன் 25, 2026 (வியாழக்கிழமை) –
Shift I: English (ஆங்கிலம்). - ஜூன் 25, 2026 (வியாழக்கிழமை) –
Shift II: History (வரலாறு).
- ஜூன் 22, 2026 (திங்கள்கிழமை) –
உங்களுடைய பாடத்திற்கான தேர்வு தேதியை சரிபார்ப்பது எப்படி?
- முதலில் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான
NTA UGC NET Official Portal செல்லவும். - முகப்புப் பக்கத்தின் ‘Latest @NTA’ பிரிவில் உள்ள “Public Notice: Subject-wise Schedule of UGC-NET June 2026” என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவும்.
- இப்போது அனைத்து பாடங்களின் தேர்வுத் தேதி மற்றும் ஷிப்ட் விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ பிடிஎஃப் (PDF) ஆவணம் திரையில் தோன்றும்.
- அதில் உங்களது பாடக் குறியீடு (Subject Code) அல்லது பாடத்தின் பெயரைத் தேடி உங்களது தேர்வு தேதியை உறுதி செய்து கொள்ளவும்.
NTA UGC NET Official Portal



























