TNSTC சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு – Apprentices CV List 2023 வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) ஆனது 2023 முதல் 2024 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள Apprentices பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNSTC Apprentices CV List 2023:
TNSTC ஆனது தமிழக போக்குவரத்து துறையில் Apprentices பிரிவின் கீழ் வரும் Graduate Apprentices, Diploma Apprentices, Non – Engineering Apprentices ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 417 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை 11.09.2023 அன்று வெளியிட்டது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Merit List மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்த நபர்களில் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் ஆனது 27.10.2023 அன்று http://boat-srp.com/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
UPSC NDA & NA I 2023 இறுதி விடைக்குறிப்புகள் – அதிகாரப்பூர்வ வெளியீடு!
இந்த சான்றிதழ் சரிபார்ப்பானது 06.11.2023 அன்று முதல் 09.11.2023 அன்று வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். இதில் கலந்து கொள்ளும் நபர்கள் அறிவிப்பின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தங்களது டிப்ளமோ அல்லது டிகிரி சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து உடன் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அழைப்பு கடிதம் ஆனது மின்னஞ்சல் மூலம் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டுள்ளது.