UPSC NDA & NA I 2023 இறுதி விடைக்குறிப்புகள் – அதிகாரப்பூர்வ வெளியீடு!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் நேவல் அகாடமி தேர்வின் (I), தேர்வின் விடைக் குறிப்புகளை தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
விடைக் குறிப்புகள்:
யுபிஎஸ்சி தேர்வு ஆணையம் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் நேவல் அகாடமி தேர்வின் 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 395 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்களை பெற்றது இதற்கான தேர்வுகள் ஏப்ரல் 16, 2023 அன்று நடத்தப்பட்டது. எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளில் பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தேர்வு வாரியத்தின் பணிகளில் மொத்தம் 628 பேர் தகுதி பெற்றதாக அக்டோபர் 27ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது.
BPCL பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – ரூ.2,80,000/- மாத சம்பளம்!
இந்நிலையில் தற்போது எழுத்துத் தேர்வின் விடைக்குறிப்புகள் யூபிஎஸ்சி ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் தேர்வர்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் அதிக விவரங்களை யூபிஎஸ்சி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வர்கள் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.