தீபாவளிக்கு துணி எடுப்பதில் சிக்கல்..ஜவுளி உற்பத்தி நிறுத்தம் – ஊழியர்கள் போராட்டம்!
தமிழகத்தில் நூல் மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஜவுளி தொழில் உற்பத்தி 20 நாட்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி நிறுத்தம்:
தமிழகத்தில் தொழில்துறையினருக்கு மின் கட்டணம் வெகுவாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஜவுளி துறையில் பெரும் பங்கு வகிக்கும் நூல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை கூட்டமைப்பினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை விலை குறைக்கப்படாத காரணத்தினால் ஜவுளி துறையினர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் நூல் மற்றும் மின் கட்டணத்தில் அதிக தொகையை செலவிடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
2024 தமிழக அரசு விடுமுறை பட்டியல்.. லீவு எத்தனை நாட்கள்??
இதனை கண்டித்து நவம்பர் 5 ஆம் தேதி 25ம் தேதி வரை 20 நாட்களுக்கு ஜவுளி உற்பத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை கூட்டமைப்பினால் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் டிசம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படஉள்ளது. இந்த பண்டிகையின் போது பொதுமக்கள் அனைவரும் புத்தாடைகள் வாங்குவது வழக்கம். அதனால் ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதும் ஜவுளி அதிக அளவில் தேவைப்படும் இந்த சூழலில் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஜவுளி துறையில் பெரும் நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.