பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு – அச்சத்தில் சுகாதாரத்துறை!
கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜிகா வைரஸ் காய்ச்சல்:
பருவமழை காலங்களில் தொற்று நோய்கள் பாதிப்பு பரவல் என்பது அதிக அளவில் உறுதி செய்யப்படும். மாறும் காலநிலை மற்றும் மழைக்கால கொசுக்கள் காரணமாக நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லபூர் மாவட்டத்தில் சித்லகட்டா தாலுகாவில் உள்ள தலகாயலபெட்டா என்ற கிராமத்தில் ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக நடத்திய சோதனையில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உடனடியாக அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
தீபாவளிக்கு துணி எடுப்பதில் சிக்கல்..ஜவுளி உற்பத்தி நிறுத்தம் – ஊழியர்கள் போராட்டம்!
காய்ச்சல், தலைவலி, தசைவலி, மூட்டு வலி, கண்இமை வீக்கம், தோல் வெடிப்பு போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ் காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கர்நாடக மாநில சுகாதாரத் துறை ஆனது மாநில முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளையும் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. தமிழகத்திலும் தற்போது டெங்கு, சிக்கன் குனியா மற்றும் மர்ம காய்ச்சல்கள் பரவி வருவதால் அரசு நோய் தடுப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியமாகியுள்ளது.