TNPSC தேர்வு எழுத போறீங்களா? – அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. போட்டி தேர்வுகள் மூலம் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் பொதுத்தமிழ், General Studies ஆகிய பாடத்திட்டங்கள் உள்ளது. இத்தேர்வுக்கு தயாராவதில் Polity பாடத்தில் தேர்ச்சி பெறுவது சற்று கடினமாகவே உள்ளது அதனை எளிமையாக்கு அதற்கு முந்தைய ஆண்டு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. இந்திய வனப்பணி மூன்றாவது அகில இந்தியப் பணியாக நிறுவப்பட்ட ஆண்டு
(A) 1965
(B) 1966
(C) 1967
(D) 1968
விடை : (B)
2. கீழ்க்கண்டவற்றில் 21 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1967- மூலமாக எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழி எது?
(A) போடோ
(B) நேபாளி
(C) கொங்கனி
(D) சிந்தி
விடை : (D)
3. உருது மட்டுமே ஆட்சி மொழியாக இருப்பது ———– மாநிலம்.
(A) உத்திர பிரதேசம்
(B) மத்திய பிரதேசம்
(C) கோவா
(D) ஜம்மு மற்றும் காஷ்மீர்
விடை : (D)
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் வெற்றி பெற இத தெரிஞ்சுக்கோங்க!
4. முதல் மக்கள் நீதிமன்றம் (Lok Adalat) நடைபெற்ற நகரம்
(A) உனா
(B) பார்மர்
(C) நொய்டா
(D) மங்களூர்
விடை : (A)
5. வேலையாட்கள் நஷ்ட ஈட்டுச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு
(A) 1948
(B) 1923
(C) 1933
(D) 1928
விடை : (B)


























