TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முந்தய ஆண்டு வினாக்களின் தொகுப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. போட்டி தேர்வுகள் மூலம் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கு தயாராவதில் General Studies பாடத்தில் தேர்ச்சி பெறுவது சற்று கடினமாகவே உள்ளது அதனை எளிமையாக்குவதற்கு முந்தைய ஆண்டு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. எரிபொருள் இயக்கம் என்பது மாறாத ________ கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத ________ கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும்.
(A) முடுக்கம், திசைவேகம்
(B) திசைவேகம், முடுக்கம்
(C) இடப்பெயர்ச்சி, திசைவேகம்
(D) திசைவேகம், இடப்பெயர்ச்சி
விடை : (B)
2. சுவாசித்தலில் சயனைட் எதிர்ப்புத்திறன் இவற்றில் காணப்படுகிறது.
(A) தாவரங்களில் மட்டும்
(B) விலங்குகளில் மட்டும்
(C) தாவரங்கள் மற்றும் விலங்குகளில்
(D) தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில்
விடை : (D)
3. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சிலவற்றின் மீது வரி விதிக்கப்படுகின்றது. இது மைய அரசுக்கு செல்கின்றது. அந்த வரி
(A) நேர்முக வரி
(B) மறைமுக வரி
(C) கலால் வரி
(D) சேவை வரி
விடை : (C)
TNPSC தேர்வு எழுத போறீங்களா? பாஸ் பண்ண இது ரொம்ப முக்கியம்!
4. ஒரு பையனின் தற்போதைய வயது அவனது தங்கையின் வயதைப்போல இரு மடங்கு, 4 ஆண்டுகளுக்கு முன்பு அவனது வயது அவன் தங்கையின் வயதைப்போல மூன்று மடங்கு எனில் அவர்களது தற்போதைய வயது என்ன?
(A) 18,9
(B) 14,7
(C) 16,8
(D) 12,6
விடை : (C)
5. 75 எண்களை கொண்ட ஒரு தொகுதியின் சராசரி 27 எனக் கணக்கிடப்பட்டது. பின்பு, 53 என்ற எண் தவறுதலாக 43 என்று படிக்கப்பட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அத்தொகுதியின் சரியான சராசரியைக் காணவும்.
(A) 26.13
(B) 27.13
(C) 28.13
(D) 25.13
விடை : (B)
























