TNPSC தேர்வில் கணித பாடத்தில் பாஸ் ஆகணுமா? இது கண்டிப்பா உங்களுக்கு யூஸ் ஆகும்!
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகப்படுத்துகிறது. அதேசமயம் கணிதத்தில் மதிப்பெண் பெறுவது மிகவும் கடினமாகவே உள்ளது.எனவே தேர்வர்களுக்கு பயன் தரும் வகையில் முந்தைய ஆண்டு வினாக்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹1,134 எனில் அதன் அசல்
(A) ₹16,000
(B) ₹15,000
(C) ₹14,000
(D) ₹20,000
(E) விடை தெரியவில்லை
விடை : (A)
2. ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது _________ ஆகும்.
(A) 99972
(B) 99958
(C) 99960
(D) 99962
(E) விடை தெரியவில்லை
விடை : (D)
3. 10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?
(A) 14 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 16 நாட்கள்
(D) 17 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
விடை : (B)
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முந்தய ஆண்டு வினாக்களின் தொகுப்பு!
4. ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு
(A) ₹3,000
(B) ₹4,000
(C) 4,500
(D) ₹ 5,000
(E) விடை தெரியவில்லை
விடை : (B)
5. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி 49, 121, 169, ?, 361
(A) 225
(B) 256
(C) 289
(D) 324
(E) விடை தெரியவில்லை
விடை : (C)



























