TNPSC தேர்வு எழுத போறீங்களா? பாஸ் பண்ண இது ரொம்ப முக்கியம்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகள் நடத்துவதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. பொது தமிழ் பாடத்தை மையமாக கொண்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. பிழையான கூற்றைக் கண்டறிக
(A) உம்மைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
(B) இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது
(C) வினைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது
(D) வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்வரும் வல்லினம் மிகாது
விடை : (D)
2. பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க
(A) செல்வி பாடினாள் – திணை வழு
(B) என் மாமா வந்தது – திணை வழா நிலை
(C) நான் வந்தேன் – இடவழு
(D) நாய் கத்தும் – மரபு வழு
விடை : (D)
3. அவன் பொன்னன் – எவ்வகை பெயர்
(A) பொருட்பெயர்
(B) இடப்பெயர்
(C) காலப்பெயர்
(D) தொழிற்பெயர்
விடை : (A)
TNPSC தேர்வில் தேர்ச்சி பெற என்ன பண்ணனும் தெரியுமா? இதை தெரிஞ்சுக்கோங்க!
4. ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது
(A) இரண்டாம் வேற்றுமை
(B) மூன்றாம் வேற்றுமை
(C) நான்காம் வேற்றுமை
(D) ஐந்தாம் வேற்றுமை
விடை : (A)
5. கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை?
(A) 96
(B) 95
(C) 94
(D) 97
விடை : (A)


























