தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணமா? இல்லையா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 7) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் தற்போது தமிழகமெங்கும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனைகள் அமோகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் உலா வந்தது.
அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு.. அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்.. விவரம் உள்ளே!!
இது தொடர்பாக தமிழக அரசு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு கட்டணம் இல்லை, சிலைகளை கரைப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகளுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளது.


























