
மகளிர் உரிமைத் தொகை இதுவரை உங்களுக்கு கிடைக்கவில்லையா..?? உங்களுக்காக துணை முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்..
தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் நோக்கத்தோடு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது” 2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு மகளிருக்கும் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊக்கத்தொகை ஆனது ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதியை ஒட்டி வரவு வைக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “தமிழ்நாடு சட்டசபையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28-03-2025) வெளியிட்டார்”. அப்போது பேசிய அவர் “கடந்த ஆண்டு மட்டும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான உரிமைத்தொகை ரூ.21,657 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இதுவரை உரிமைத்தொகை பெற்றிடாத தகுதி வாய்ந்த மகளிருக்கு, புதிதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும் என துணை முதல்வர் உறுதியளித்துள்ளார்”.

























