
முன்னதாக வழங்கப்பட்ட ஊதியம் இனி கிடையாது.. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு.. வெளியான அதிரடி உத்தரவு..
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் வேலை வழங்கும் வகையில் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம்” ஆனது இந்திய முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கிராமப்புறங்களில் வசிக்கும் வயதானவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வரை வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதாகும். மேலும், குளம், ஏரி ஆழப்படுத்துதல், கால்வாய் சீரமைப்பு, ரோடு அகலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ரயில் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் கவனத்திற்கு… தமிழக ரயில்வே போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்..
இந்நிலையில் “மத்திய அரசு 2025-26ம் ஆண்டுக்கான 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இத்திட்டத்தில் ஒரு நாளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் ரூ.319 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.17 வரை ஊதியம் அதிகரிக்கப்பட்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரூ.336 ஆக வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் “ஆந்திரா, அருணாச்சல பிரேதசம், அசாம், நாகலாந்து மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தலா ரூ.7 வரை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் இத்திட்டத்திற்கான சம்பளம் ரூ.26 உயர்த்தப்பட்டு இனி ஊழியர்களுக்கு ரூ.400 வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது”.

























