“என்னது கிரெடிட் கார்டை விட சார்ஜ் கார்டில் இவ்ளோ சலுகைகளா…??”அப்போ உடனே இதை தெரிஞ்சுக்கிட்டு வாங்கிருங்க மக்களே…

0
"?????? ???????? ?????? ??? ?????? ???????? ????? ????????...??"????? ???? ??? ???????????????? ??????????? ??????...
"என்னது கிரெடிட் கார்டை விட சார்ஜ் கார்டில் இவ்ளோ சலுகைகளா...??"அப்போ உடனே இதை தெரிஞ்சுக்கிட்டு வாங்கிருங்க மக்களே...

“என்னது கிரெடிட் கார்டை விட சார்ஜ் கார்டில் இவ்ளோ சலுகைகளா…??”அப்போ உடனே இதை தெரிஞ்சுக்கிட்டு வாங்கிருங்க மக்களே…

நாம் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கிரெடிட் கார்டு மூலம் பெற்ற கடன் தொகையை பயன்படுத்தி பணம் செலுத்துகிறோம். மேலும், இந்த கிரெடிட் கார்டை போலவே அதிக சலுகைகளை வழங்கும்  ‘சார்ஜ் கார்டும்’  மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாகி வருகிறது. அதாவது, இந்த கிரெடிட் கார்டில் செலவு செய்வதற்கு வங்கிகள் முன்கூட்டியே கடன் வரம்பு நிர்ணயிக்கின்றன. ஆனால், இந்த சார்ஜ் கார்டில் இதுபோன்ற கடன் வரம்புகள் கிடையாது. மேலும், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின்  மாதாந்திர கடன் பில் வரும்போது பகுதியாகவோ, முழுமையாகவோ செலுத்தலாம்.
ஆனால், சார்ஜ் கார்டில் அந்தந்த மாதத்திற்கான கடன் தொகையை  முழுமையாக திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், கிரெடிட் கார்டின் மாதாந்திர நிலுவை தொகைக்கு அபராதமாக ஒரு குறிப்பிட்ட தொகை வட்டியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், சார்ஜ் கார்டில் இந்த வட்டி முறைகள் இல்லை என்றாலும் , வங்கிகள் மூலம் தற்காலிகமாக அவர்களின் கணக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும், இந்த சார்ஜ் கார்டில் விரிவான வெகுமதிகள், பயண சலுகைகள் மற்றும் வரவேற்பு சேவைகள் அளிக்கப்படுகிறது. எனவே, இந்த சார்ஜ் கார்டு பற்றிய முழு விவரங்களையும்  வங்கிகள் மூலம் தெரிந்துகொண்டு, உங்கள் நிதிநிலைமைக்கு ஏற்றார் போல் முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!