
எலான் மஸ்கின் செயலுக்கு பில்கேட்ஸ் எதிர்ப்பு…!! லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என சாடல்..!!
வணிகம் மற்றும் தொழில்நுட்ப மென்பொருள் சேவைகளில் முன்னிலை வகிக்கும் தொழிலதிபர்களில் பில்கேட்ஸும் ஒருவர். இந்நிலையில் இவர் தனது புதிய புத்தகம் “சோர்ஸ் கோட்” (Source Code) யை விளம்பரப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊடக நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், எலோன் மஸ்க் உளவுத்துறை மற்றும் தனியார் துறைகளில் காட்டும் பங்களிப்புகளை பாராட்டிய அவர், மஸ்கின் சமீபத்திய அரசியல் அறிவிப்பு ஒன்று குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
Top 10 Longest Rivers of India in Tamil- Free PDF Download…!!
அதாவது, “சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தை (USAID) மூடப்போவதாக தொழிலதிபரும், அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) தலைவருமான எலான் மஸ்க் அறிவித்ததற்கு மைக்ரோசாப்ட் (MICROSOFT) நிறுவனர் பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், USAID மூலம் வழங்கப்படும் வளர்ச்சி நிதியானது நிறுத்தப்பட்டால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பிற்கு இது வழிவகுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்”.

























