‘கற்போம் எழுதுவோம்’ திட்ட அடிப்படை தேர்வுகள் – மார்ச் 27 முதல் நடைபெறும்!!
மத்திய அரசின், ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் பயின்று வருவோருக்கு அடிப்படைத்தேர்வு மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்:
மத்திய அரசின் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டம் மூலமாக 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளி செல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்கான வகுப்புகள் துவக்க நடுநிலைப்பள்ளிகளில் தினமும் இரண்டு மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகள் மூலமாக கல்வி அறிவு இல்லாதவர்களும், கையெழுத்திடவும், வங்கி கணக்குகளை கையாளவும், பஸ் எண்களை அடையாளம் காணவும் பயனுள்ளதாக உள்ளன.
TN Job “FB
Group” Join Now
இந்த வகுப்புகளில் பயிலுவோருக்கு அடிப்படைத்தேர்வு மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான பணிகளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் ‘தேர்வு அறை, தேர்வர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். இந்த தேர்வுகளை ஒரு மையத்தில் 20 பேர் என எழுதலாம்.
50 வயதான ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு – தமிழக அரசிடம் கோரிக்கை!!
தேர்வுகள் நடந்து முடிந்த பின்பு ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் விடைகளை திருத்த வேண்டும். அதற்கான மதிப்பெண் பட்டியல் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தேர்வுகளில் வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணக்கீடு ஆகிய பிரிவுகளில் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்’ என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்