தமிழக வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் வாபஸ் – சட்டமன்ற தேர்தல் எதிரொலி!!
தமிழக அரசின் கீழ் செயல்படும் வருவாய்துறை அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 10 நாட்களுக்கு மேல் நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அலுவலர்கள்:
தமிழ்நாடு அரசின் தொன்மையான துறைகளில் ஒன்றான வருவாய்துறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருவாய்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள், ஊதிய உயர்வு வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 10 நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலகங்களும் மூடப்பட்டன. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 நாட்களாக மூடப்பட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். அதே போல வருவாய்துறை அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள நிலையில் பணி சுமையை குறைக்க வருவாய் துறையில் காலியிடங்களை நிரப்ப தலைமை தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்