தமிழகத்தில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு – மாணவர்கள் எதிர்பார்ப்பு!!

1
தமிழகத்தில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு - மாணவர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு - மாணவர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு – மாணவர்கள் எதிர்பார்ப்பு!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் விரைந்து கல்லூரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரிகள் திறப்பு:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டன. பின்னர் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்த காரணத்தால் கல்லூரிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை உத்தரவு!!

அதன்படி கடந்த வருடம் டிசம்பர் 6ம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பிற மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக்கல்வி தொடரும் என தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டதால் மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைந்துள்ளதாக கூறிய ஆசிரியர்கள், மேலும் பலர் வேலைக்கு சென்று விட்டதாக வேதனை தெரிவித்தனர்.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கியது. மேலும் நோய் பாதிப்பும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் கடந்த பிப்ரவரி 8ம் தேதி முதல் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி கல்லூரிகள் முழுவதுமாக திறக்கப்பட்டதால் மாணவர்களும் ஆர்வத்துடன் வருகை புரிய தொடங்கினர். நீண்ட நாட்களுக்கு பின்னர் நண்பர்கள், ஆசிரியர்களை சந்தித்ததால் மாணவர்களுக்கு உற்சாகம் அதிகரித்தது.

அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

தற்போது மாநிலம் முழுவதும் தினசரி 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் நோய்த்தொற்று 2வது அலை பரவி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் நலன் கருதி கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை வழங்கி அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் மீண்டும் வகுப்புகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடத்தப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை விளக்கம்!

கொரோனா 2வது அலை ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ள நிலையில், அடுத்த செமஸ்டரில் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. There should be something wrong in the article writer
    Who expect to open college If covid cases reduced means Govt will open

    Kindly remove this article Publish the article after understand the reality please

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here