தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை விளக்கம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் முழு ஊரடங்கு ஏற்படுமா என்று மக்களிடம் குழப்பம் நிலவி வந்த நிலையில் இதற்கு சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கு:

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பு மீண்டும் முழு ஊரடங்கு ஏற்படும் என்று தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணமே இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு, மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி, அரசுத்துறை ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரியும் விகிதம் குறைப்பு.

TN Job “FB  Group” Join Now

பூங்கா, திரையரங்கம், நீச்சல் குளம் உள்ளிட்டவற்றைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏப்ரல் 9 முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு தேர்தலுக்கு பின்பு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தெரிவித்திருந்தது.

ஆதார், பான் இணைப்பு – ஆப்லைனில் செய்வது எப்படி?

ஆனால் இணையத்தில் விரைவில் முழு ஊரடங்கு என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது இதற்கு சுகாதாரத் துறையினர் விளக்கமளித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் கொரோனாவின் வேகத்தை குறைப்பதற்கு அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். மீண்டும் முழு முடக்கம் என்னும் பரவும் செய்தி போலியானது என்று தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here