அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

0
அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்தது ஏற்கமுடியாத செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரியர் தேர்வு ரத்து

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மறுபடியும் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் காணப்பட்டதால், தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. அதே போல கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால், கல்லூரி மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதே சமயம் கல்லூரியில் அரியர் தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்திருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கியது. இந்நிலையில் மாநில அரசு அரியர் தேர்வுகளை ரத்து செய்தது ஏற்கமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரவு நேர ஊரடங்கு ஏப்ரல் 30 வரை அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

இதுகுறித்து நீதிமன்றம் சார்பில் கூறுகையில், ‘அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசின் உத்தரவை ஏற்க முடியாது. அதனால் அரியர் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வில் சமரசம் செய்யாமல், எப்படி தேர்வுகளை நடத்தலாம் என ஆலோசியுங்கள். அரியர் தேர்வு விஷயத்தில் UGC மற்றும் தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும். அந்த ஆலோசனை அறிக்கையை வரும் 15ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here