சையத் முஸ்தாக் அலி கோப்பை: கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி அறிவிப்பு!

0
சையத் முஸ்தாக் அலி கோப்பை கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி அறிவிப்பு!
சையத் முஸ்தாக் அலி கோப்பை கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி அறிவிப்பு!

சையத் முஸ்தாக் அலி கோப்பை: கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி அறிவிப்பு!

சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடருக்கான தமிழக அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சையத் முஸ்தாக் அலி கோப்பை:

இந்தியாவில் நடத்தப்படும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் முக்கியமானது சையத் முஸ்தாக் அலி கோப்பை. ஐபிஎல் தொடருக்கு அடுத்த படியாக அதிக ரசிகர்களை கொண்டது சையத் முஸ்தாக் அலி கோப்பை தான். தற்போது இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா தொற்றின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தொடங்கப்பட்டு நடந்தாலும் தொற்றின் பரவலால் பத்தியில் நிறுத்தப்பட்ட தொடர் தற்போது அமீரகத்தில் நடந்து கொண்டுள்ளது.

IPL 2021: சென்னை இடத்தை பிடிக்குமா பெங்களூரு? RCB vs SRH இன்று பலப்பரீட்சை!

லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வர உள்ள நிலையில் ஐபிஎல் தொடரும் வரும் அக்டோபர் 15ம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. அதன் பின்னர் T20 ஆண்கள் உலக கோப்பை போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே குறிப்பிட்டபடி சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடர் வரும் நவம்பர் 04 தேதி முதல் தொடங்க உள்ளது.

அதற்கான தமிழக அணி தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அணியை தினேஷ் கார்த்திக் வழிநடத்த உள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்றால் விளையாடாமல் உள்ள நடராஜன், ஆல் ரவுண்டர் வாஷிங்டர் சுந்தர் போன்றோர் தற்போது அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

IPL 2021 – RR vs MI: அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

தமிழக அணி விவரம்:

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் ஷங்கர் (துணை கேப்டன்), எம் எஸ் வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், சந்தீப் எஸ் வாரியர், ஆர் சாய் கிஷோர், பி அபராஜித், என் ஜெகதீசன், எம் அஸ்வின், எம் ஷாருக் கான், சி ஹரி நிஷாந்த், எம் சித்தார்த், வி கங்கை ஸ்ரீலதர் ராஜு, எம் முகமது, ஜெ கவுசிக், ஆர் சஞ்சய் யாதவ், ஆர் சிலம்பரசன், ஆர் விவேக் ராஜ், பி சாய் சுதர்ஷன், பி சரவண குமார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here