IPL 2021: சென்னை இடத்தை பிடிக்குமா பெங்களூரு? RCB vs SRH இன்று பலப்பரீட்சை!

0
IPL 2021 சென்னை இடத்தை பிடிக்குமா பெங்களூரு RCB vs SRH இன்று பலப்பரீட்சை!
IPL 2021 சென்னை இடத்தை பிடிக்குமா பெங்களூரு RCB vs SRH இன்று பலப்பரீட்சை!

IPL 2021: சென்னை இடத்தை பிடிக்குமா பெங்களூரு? RCB vs SRH இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் தொடரின் இன்றைய 52வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் கோதாவில் மோதவுள்ளான். போட்டிக்கான உத்தேச வீரர்கள் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்த தகவல்களை இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

RCB vs SRH இன்று பலப்பரீட்சை:

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் இன்னும் சில லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்நிலையில் இன்றைய மோதலில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் களம் காணுகின்றன. பலம் வாய்ந்த பெங்களூர் அணி இந்த சீசனில் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் கட்டம் துவங்கியது முதல் இரண்டு போட்டிகளில் தொடர் தோல்வி அடைந்த பின்னர், வரிசையாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முனறியுள்ளது.

உயிருக்கு போராடும் பாரதியை மீட்கும் கண்ணம்மா – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 ப்ரோமோ!

இன்னும் 2 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் இரண்டிலும் வெற்றி பெற்றால் சென்னையை பின்னுக்கு தள்ளி 2ம் இடத்தை பிடித்திடலாம். முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணி குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறும் என்பதனால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும். ஐதராபாத் அணி முதல் அணியாக சீசனில் இருந்து வெளியேறியுள்ளது. இதுவரை 2 வெற்றி மற்றும் 10 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் கடைசி இடத்தில் தான் இருக்க முடியும். எனினும் இந்த தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய போராடும்.

இவ்விரு அணிகளும் முன்னர் மோதிய போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இன்றைய போட்டியில் ஐதராபாத் வரிந்து கட்டும். குவாலிபையர் தகுதியினை இலக்காக வைத்து பெங்களூர் அணியும் மல்லுக்கட்டும் என்பதனால் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை மோதியுள்ளன. அதில் ஐதராபாத் அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது. பெங்களூர் அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

உத்தேச அணி விவரங்கள்:
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (சி), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (wk), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, டான் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (wk), கேன் வில்லியம்சன் (சி), ப்ரியம் கார்க், அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!