உயிருக்கு போராடும் பாரதியை மீட்கும் கண்ணம்மா – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 ப்ரோமோ!

0
உயிருக்கு போராடும் பாரதியை மீட்கும் கண்ணம்மா - வெளியான 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 ப்ரோமோ!
உயிருக்கு போராடும் பாரதியை மீட்கும் கண்ணம்மா - வெளியான 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 ப்ரோமோ!
உயிருக்கு போராடும் பாரதியை மீட்கும் கண்ணம்மா – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 ப்ரோமோ!

விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பல எதிர்பாராத ட்விஸ்டுகள் ஒளிபரப்பாகி வரும் இந்த சூழலில், மரணத்தருவாயில் இருக்கும் பாரதியை மீட்டு கண்ணம்மா மருத்துவமனையில் அனுமதிப்பது போல இருக்கும் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

பல்வேறு புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது முக்கியமான கதைக்களத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஒளிபரப்பப்படும் சமீபத்திய காட்சிகளை பார்க்கையில் சீரியல் முடிவை எட்டியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரதி மற்றும் வெண்பாவின் திருமணம், கண்ணம்மாவின் குழந்தை லட்சுமி என்கிற உண்மை, பாரதி கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்தது என அனைத்து ரகசியங்களும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி & ஹேமா வெளியிட்ட வீடியோ, கெடுக்கும் பாரதி – இன்ஸ்டா வைரல்!

குறிப்பாக ஹேமா பற்றிய உண்மையும் இந்த வார எபிசோடுகளில் வெளியாக இருக்கிறது. அதனால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவுக்கு வருவதாகவும், விரைவில் அதன் 2ம் பாகம் ஒளிபரப்பப்படும் எனவும் சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதிலும், கண்ணம்மாவிடம் இருக்கும் குழந்தை லட்சுமி வளர்ந்து கலெக்டர் படிப்பு படிப்பதாகவும், லட்சுமி கதாப்பாத்திரத்தில் நடிகை அனிகா நடிக்க இருப்பதாவும் சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

பாக்கியா பற்றி ராதிகாவிடம் கூறும் கோபி, போலீசில் புகார் அளிக்கும் எழில் – இன்றைய எபிசோட்!

இந்நிலையில் மீண்டுமாக, கடற்கரையில் பாரதி உயிருக்கு போராடி கொண்டிருப்பது போலவும், கண்ணம்மா அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிப்பது போலவும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் 2ம் பாக கதைக்களம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி, கண்ணம்மாவுடன் வாழ்ந்த அழகிய தருணங்களை நினைத்து பார்ப்பது போலவும் சில காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!