ஆதார் முறையான ஆவணம் அல்ல.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
பஞ்சாபில் கடந்த 2015 ஆம் ஆண்டு சாலை விபத்தில் இறந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் போது மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் ஆதார் அடிப்படையில் வயதை 45ல் இருந்து 47ஆக தவறாக கணக்கிட்டது. இதனால், பஞ்சாப்-ஆரியானா உயர் நீதிமன்றம் இறந்தவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை ரூ.19.35 லட்சத்தில் இருந்து ரூ.9.22 லட்சமாகக் குறைத்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 24) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் தங்கம் விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம்.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!
அப்பொழுது, 2015 பிரிவு 94ன் கீழ் ஆண்டின் சிறார் நீதி சட்டப்படி, பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில் தான் வயதை தீர்மானிக்க வேண்டும். பிறந்த தேதிக்கு ஆதார் அட்டை ஆதாரமல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விபத்து இழப்பீடு வழக்கில் ஆதாரை வயதுக்கான சான்றாக ஏற்றுக்கொண்டு பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
























