
நீங்க இந்த ரேஷன்அட்டைதாரரா… அப்போ இந்த இலவச அடுப்பும் கேஸ்யும் உங்களுக்கு தான்… அரசின் அசத்தல் அறிவிப்பு…
மத்திய அரசு வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு உதவும் வகையில், ரேஷன் கார்டை அறிமுகம் செய்து அதன் மூலம் மானிய விலையில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அவ்வாறு BPL ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு உதவும் 4 திட்டங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த திட்டங்களின் மூலம் உங்களுக்கு இலவச சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம்:
“ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம்” என்பது மத்திய அரசின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் BPL குடும்ப அட்டை தாரர்கள் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ சேவைகளை பெறலாம். மேலும், வெள்ளை அட்டைதாரர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்:
இந்த திட்டமானது BPL குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் மற்றும் இலவச அடுப்புகளை வழங்கி வருகிறது. இதில் நீங்கள் ரீஃபில் செய்யும் எரிவாயுக்கு ரூ.300 வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இதன் 3 ம் கட்ட விண்ணப்பங்கள் விரைவில் தொடங்கப்பட இருப்பதால், புதிதாக சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தமிழகத்தில் தங்கம் விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம்.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்:
இந்த திட்டத்தின் மூலம் சொந்த வீடு கட்ட விரும்பும் உங்களுக்கு, ரூ.1,20,000 வரை அரசு மானியம் வழங்குகிறது. இதுமட்டுமின்றி, இதன் மூலம் 2 கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நீங்கள் வெள்ளை அட்டைதாரர்களாக இருந்தாலும் , இதில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டம்:
கொரோனா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் BPL அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மூலம் சர்க்கரை, கோதுமை,மண்ணெண்ணெய் மற்றும் அரிசி முதலிய பொருட்களை இலவசமாக வழங்கப்பட்டதை, தொடர்ந்து தற்போது மேலும், 5 ஆண்டுகள் நீட்டித்துள்ளது.























