PKL 2024 : கடைசி நிமிடத்தில் தலைகீழாக மாறிய போட்டி.. மேஜிக் செய்த பெங்கால் வாரியர்ஸ்!!
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று (அக்டோபர் 24) பெங்கால் வாரியர்ஸ் அணி UP யோதாஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், பெங்கால் வாரியர்ஸ் அணி 3 புள்ளி வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதாவது, UP யோதாஸ் 29 புள்ளிகள் எடுக்க, பெங்கால் வாரியர்ஸ் 32 புள்ளிகளை எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இதில், பெங்கால் அணியின் மனிந்தர்சிங் 8 புள்ளிகளை எடுத்து அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், பெங்கால் வாரியர்ஸ் 6 புள்ளிகளுடன் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதே போன்ற மற்றொரு ஆட்டத்தில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 37– 25 என்ற புள்ளிகள் எடுத்து தோல்வியை தழுவியது.
























