பல வாரங்களுக்கு பின் டாப் 5ல் விஜய் டிவி சீரியல்கள் – TRP பட்டியல் வெளியீடு!
தமிழ் சின்னத்திரையில் இந்த ஆண்டிற்கான 35வது வார TRP ரேட்டிங் வெளியாகி இருக்கிறது. அதில் முதல் இடத்தை சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் 9.6 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.
TRP பட்டியல்:
சின்னத்திரையில் ஒவ்வொரு வாரமும் சன் டிவி விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் 35வது வாரத்திற்கான TRP பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் வழக்கம் போல சன் டிவி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. அதன் படி 9.6 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் சீரியல் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தை நீண்ட நாட்களுக்கு பின் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 9.4 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு பணி – வலுக்கும் கோரிக்கை!
மூன்றாவது இடத்திலும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தான் 8.9 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. நான்காவது இடத்தை கயல் சீரியல் 8.4 புள்ளிகளுடனும், ஐந்தாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 8.3 புள்ளிகளுடனும், ஆறாவது இடத்தை சுந்தரி சீரியல் 7.8 புள்ளிகளுடனும், ஏழாவது இடத்தை இனியா சீரியல் 7.0 புள்ளிகளுடனும், எட்டாவது இடத்தை வானத்தை போல மற்றும் ஆஹா கல்யாணம் சீரியல் 6.7 புள்ளிகளுடனும், ஒன்பதாவது இடத்தை ஈரமான ரோஜாவே சீரியல் 6.0 புள்ளிகளுடனும், பத்தாவது இடத்தை MR.மனைவி சீரியல் 5.9 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.