தமிழகத்தில் எலுமிச்சையின் விலை திடீர் உயர்வு – கிலோவுக்கு ரூ.150க்கு விற்பனை!
தமிழகத்தில் எலுமிச்சையின் விலை கிலோவுக்கு ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென உயர்ந்து கிலோவுக்கு ரூ.150க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது.
எலுமிச்சையின் விலை:
தமிழகத்தில் தற்போது பருவமழை துவங்கியுள்ள நிலையில் போதுமான காய்கறிகளின் கொள்முதல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக எலுமிச்சையின் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
பெரும்பாலும், தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தான் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், இந்த மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது திடீரென எலுமிச்சையின் கொள்முதல் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை (செப்.18) மின்தடை – பகுதிகள் குறித்த விவரம் இதோ!
இதனால், ஒரே மாதத்தில் எலுமிச்சையின் விலை அதிகரித்து மார்க்கெட்களில் கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.130 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சில்லறை விற்பனையாக கிலோவுக்கு ரூ.150க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அடுத்தடுத்த நாட்களில் எலுமிச்சையின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.