தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு 1 ஏற்றம் – பதற்றநிலையில் மக்கள்!
தமிழகத் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மக்கள் பதற்ற நிலையில் உள்ளனர்.
புயல் எச்சரிக்கை:
நவம்பர் 14ஆம் தேதி அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றோட்ட தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது நவம்பர் 16ஆம் தேதி போல் ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காரணத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரிசா கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வட மேற்கு வங்க கடல் பகுதியில் 17ஆம் தேதி நிலவு கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN TRB ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு 2023 – 350+ காலியிடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு!
இந்நிலையில் தமிழகத்தில் நாகை, புதுச்சேரி, கடலூர் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதே போல் சென்னை – எண்ணூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக கடலோரப் பகுதி மக்கள் பதற்ற நிலையில் உள்ளனர.