TN TRB ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு 2023 – 350+ காலியிடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு!
தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் (TNTRB) ஆனது பள்ளி கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கான 2222 பணியிடங்கள் குறித்த அறிவிப்பை 25.10.2023 அன்று வெளியிட்டது. இதனை தொடர்ந்து இன்று வெளியான அறிவிப்பில் பள்ளி கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் ஆசிரியர் பணிக்கு (GT / BRTE) என கூடுதலாக 360 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TN TRB GT / BRTE 2023 காலிப்பணியிடங்கள்:
ஆசிரியர் பணிக்கு (Graduate Teacher / Block Resource Teacher Educator) என கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 360 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சி – 86 பணியிடங்கள்
- பள்ளி கல்வி இயக்ககம் – 196 பணியிடங்கள்
- தொடக்கக்கல்வி இயக்ககம் – 78 பணியிடங்கள்
TN TRB GT / BRTE 2023 பணிக்கான தகுதிகள்:
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Graduate Degree + Diploma, Graduate Degree + B.Ed, 12ம் வகுப்பு + B.El.Ed, 12ம் வகுப்பு + BA / B.Sc.Ed / B.A.Ed ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் TN TET Paper – II தேர்ச்சி பெற்றவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
- 01.07.2023 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 53 வயது முதல் 58 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு Level – 16 படி, ரூ.36,400/- முதல் ரூ.1,15,700/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
TN TRB தேர்வு 2023 – பாஸ் ஆக ஈஸியான வழி!
- Compulsory Tamil Language Eligibility Test, Written Examination, Certificate Verification ஆகிய தேர்வு முறைகளின் மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
TN TRB GT / BRTE 2023 விண்ணப்பிக்கும் முறை:
இத்தகைய ஆசிரியர் பணிக்கான (Graduate Teacher / Block Resource Teacher Educator) கூடுதல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (30.11.2023) கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / SCA / உடல் ஊனமுற்ற நபர்களிடம் ரூ.300/- என்றும், மற்ற நபர்களிடம் ரூ.600/- என்றும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.