தமிழகத்தில் ரேஷன் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு – பொதுமக்கள் அவதி!!
தமிழகத்தில் நெல் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில் ரேஷன் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ரேஷன் அரிசி:
தமிழக ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அரிசி மற்றும் கோதுமை தட்டுப்பாட்டினால் பெரும்பாலான மாநிலங்களில் தற்காலிகமாக அரிசி, கோதுமை வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால், தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு தங்குதடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் போதுமான பருவமழை பொழியாத காரணத்தினால் அரிசி விளைச்சல் மிகவும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தமிழக ரேஷன் கடைகளில் கடுமையாக அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் அரிசி வழங்குபடுமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.