IND vs NZ 2023 Semi Final : விராட் & ஷ்ரேயாஸ் சதம்.. இந்தியா 397 ரன்கள் குவிப்பு!!

0
IND vs NZ 2023 Semi Final : விராட் & ஷ்ரேயாஸ் சதம்.. இந்தியா 397 ரன்கள் குவிப்பு!!
IND vs NZ 2023 Semi Final : விராட் & ஷ்ரேயாஸ் சதம்.. இந்தியா 397 ரன்கள் குவிப்பு!!

IND vs NZ 2023 Semi Final : விராட் & ஷ்ரேயாஸ் சதம்.. இந்தியா 397 ரன்கள் குவிப்பு!!

2023 உலக கோப்பை தொடரானது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மல்லுக்கட்டி வருகின்றனர்.

தற்போது டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனால் நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய உள்ளது.

  • நேரம்: பிற்பகல்: 2.00 AM
  • நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார்

IND vs NZ 2023 Semi Final Live Updates:

IND INNINGS – 397-4
  • 38-50வது ஓவர்: (397-4) இந்திய அணியின் ரன் ரேட் 7க்கு மேல் இருக்கும்படி விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து 42வது ஓவரில் விராட் தனது 50வது சர்வதேச ODI சதத்தை பதிவு செய்தார். விராட் இந்தப் போட்டியில் சதம் அடித்த காரணத்தினால், சர்வதேச ODI கிரிக்கெட்டில் 50 சதம் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதன் பிறகு 44வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு 44வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். ஒரு பக்கம் விராட் சாதனைகளை படைக்க மறுபக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் தனது மட்டையால் ருத்ர தாண்டவம் ஆடினார். இதன் மூலம் உலகக் கோப்பை அரையிறுதியில் மிக வேகமான சதத்தை ஷ்ரேயாஸ் ஐயர் பதிவு செய்தார். பிறகு கே. எல். ராகுல் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட இந்தியா 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்துள்ளது. இதற்கிடையே காயத்தில் இருந்து மீண்டு வந்த கில் களமிறங்கினாலும் பெரிதாக சோபிக்கவில்லை.
  • 31-37வது ஓவர்: (270-1) ஒவ்வொரு ஓவரிலும் மட்டையை சுழற்றிய பேட்ஸ்மேன்கள் ஸ்கோரை சைய விடாமல் பார்த்து கொண்டனர். குறிப்பாக கோஹ்லி ஏதுவான பந்துகளை விரட்டி அடிக்க, ஷ்ரேயஸ் ஐயர் சிக்ஸர் பவுண்டரிகளை அடித்து அசத்தினார். இவரக்ளின் அதிரடியால் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன் இருவரும் 100 ரன்கள் பார்ட்னெர்ஷிப் அமைத்து நிலைத்து நிற்கின்றனர்.
  • 15-30வது ஓவர்: (214-1) அதிரடியாக விளையாடி வந்த ஷுப்மான் கில் 79 ரன்கள் குவித்த நிலையில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வு பெற்றார். இதை அடுத்து இந்திய அணியின் ஸ்கோர் வேகம் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் விராட் கோஹ்லி சரியான நேரத்தில் பவுண்டரிகள் அடித்து அசத்தினார். மேலும் ஷ்ரேயஸ் ஐயரும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து வருகிறார். அசத்தலாக விளையாடிய கோஹ்லி தனது 72 வது ஒருநாள் அரை சதத்தை பதிவு செய்தார். இதை அடுத்து விராட் தனது கியர்களை மாற்றி சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசி வருகிறார். அத்துடன் இருவருக்கும் இடையே 50 ரன்கள் பார்ட்னெர்ஷிப் கிடைத்து விட்டது.
  • 7-15வது ஓவர்: (118-1) தொடர்ந்து ரோஹித் சர்மா அதிரடியான சிக்ஸர்கள் அடித்து அசத்தி வருகிறார். என்ன தான் ரோஹித் அதிரடியாக விளையாடினாலும் டிம் சவுதின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். ஒரு பக்கம் இந்திய அணி முதல் விக்கெட்டை பறிகொடுத்தாலும் கில் அவரின் அதிரடியை தொடங்கியுள்ளார். தொடர்ந்து விராட் மற்றும் கில் சிறப்பாக விளையாடுவதால் அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்துள்ளது.
  • 1-6வது ஓவர்: (58-0) இந்திய அணிக்கு ரோஹித் மற்றும் கில் அதிரடி துவக்கத்தை தந்துள்ளனர். குறிப்பாக கேப்டன் ரோஹித் வாணவேடிக்கை காட்டி வருகிறார். 6 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் அவர் தலா 4 பவுண்டரி & சிக்ஸர் விளாசியுள்ளார். இதனால் இந்திய அணி வேகமாக 50 ரன்களை கடந்து விட்டது. இதே பார்மில் விளையாடினால் இந்திய அணி பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர். நியூஸிலாந்து தரப்பில் நட்சத்திர பவுலர்கள் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவு

Follow our Instagram for more Latest Updates

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

நியூசிலாந்து: டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன் ), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டாம் லாதம் (விக்கெட் கீப்பர் , மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!