கல்யாண சீசனை முன்னிட்டு அதிரடியாக உயரும் தங்கம் விலை – காரணம் என்ன? முழு விவரம்!
சர்வதேச முதலீட்டு சந்தையில் அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் குறைந்த நிலையில் தங்கம் விலையானது உயர வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
தங்கம் விலை
இந்தியாவில் தங்கம் விலையானது கடந்த மாதம் குறைந்த நிலையில் தற்போது அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் சர்வதேச முதலீட்டு சந்தையில் அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் குறைந்தது மூலம் பபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் முடிவு சரியானது என நிருபணமான நிலையில், மூடிஸ் அமெரிக்க அரசு பத்திரங்கள் மீதான அவுட்லுக்-ஐ மாற்றியது மூலம் அதிகப்படியான முதலீடுகள் வெளியேறியது. இதன் காரணமாக அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் ஓரே நாளில் 105.64 இருந்து 104.11 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு 1 ஏற்றம் – பதற்றநிலையில் மக்கள்!
இதனால் வெளியேறிய முதலீடுகள் தங்கம் மீது குவிந்தது. அதனால் சர்வதேச சந்தையின் தங்கம் விலை 1945 டாலரில் இருந்து 1967 டாலர் வரை உயர்ந்துள்ளது. அது மட்டுமில்லாமல் எம்சிஎக்ஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.44 சதவீதம் உயர்ந்து 60,332.00 ரூபாய்க்கும், வெள்ளி விலை 0.69 சதவீதம் உயர்ந்து 72,088 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு பின் திருமண சீசன் வருவதால் தங்கம் விலை அதிரடியாக உயர இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.