SSC MTS / Havaldar 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு!
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது தற்போது நடைபெற்ற SSC MTS / Havaldar (CBIC & CBN) 2023 எழுத்துத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை 17.09.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த விடைக்குறிப்பை தேர்வர்கள் எங்களது வலைதள பக்கத்தின் வாயிலாக மிக எளிதாக பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
SSC MTS / Havaldar 2023 விடைக்குறிப்பு:
அரசு அலுவலகங்களில் Multi Tasking Staff மற்றும் Havaldar பணிகளுக்கு என 2023 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 1558 காலியிடங்களுக்கான அறிவிப்பானது 30.06.2023 அன்று இந்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்களானது 21.07.2023 அன்று வரை இணையவழியாக பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பணிகளுக்கான எழுத்துத்தேர்வானது 01.09.2023 அன்று முதல் 14.09.2023 அன்று வரை கணினிவழி தேர்வு முறையில் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது 17.09.2023 அன்று SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.nic.in/ -ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறிப்பை தேர்வர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் தங்களது பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை சரியாக உள்ளீடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 20.09.2023 அன்று வரை மட்டுமே இந்த விடைக்குறிப்பை தேர்வர்கள் பெற முடியும்.
இத்தகைய விடைக்குறிப்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை தெரிவிக்க தேர்வர்களுக்கு 17.09.2023 அன்று முதல் 20.09.2023 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஆட்சேபனையை இணையவழி மூலம் தெரிவிக்கலாம். இதற்கு ரூ.100/- கட்டணமாக வசூலிக்கப்படும்.