
அந்தமானில் நிக்கோபாரில் இன்று தொடங்கியது தென்மேற்குப் பருவமழை.. வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மக்களை வெகுவாக வாட்டி வருகிறது. மேலும், பல பகுதிகளிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருவதால் பெரும்பாலானோர் பகலில் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமாக மே மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருமவழை நடப்பாண்டு முன்கூட்டியே நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வெளியான மற்றொரு Layoff அறிவிப்பு..10,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பிரபல நிறுவனம் அதிரடி நடவடிக்கை..!!
அதன்படி தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (13-05-2025) தொடங்கியுள்ளது. மேலும், கேரளாவில் வரும் 27 ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக குமரிமுனை வரை பரவும் என்றும், இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

























