ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்..!! முன்பதிவில்லா ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!
தமிழகத்திற்கு வேலை தேடி வரும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விடுமுறை தினங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்த நபர்களும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால், ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி தெற்கு ரயில்வேயில் இயங்கும் 15 ரயில்களில் ஜனவரி மாதம் முதல் கூடுதலாக 4 முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை இணைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி சிறப்பு ரயில்கள் எப்போது?? வெளியான முக்கிய தகவல்!!


























