புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.. 2 பேருந்துகள் மீது கல்வீச்சு.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின்துறை தனியார்மயமாவதை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (செப்டம்பர் 18) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்..!! முன்பதிவில்லா ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது . போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் சூழலில் இந்த கல்வீச்சு நடந்துள்ளது. இந்த கல்வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


























