தமிழகத்தில் பீடி, சிகரெட் விற்பனை செய்ய தனி உரிமம் – புது நடைமுறை விரைவில் அமல்!

0
தமிழகத்தில் பீடி, சிகரெட் விற்பனை செய்ய தனி உரிமம் - புது நடைமுறை விரைவில் அமல்!
தமிழகத்தில் பீடி, சிகரெட் விற்பனை செய்ய தனி உரிமம் - புது நடைமுறை விரைவில் அமல்!
தமிழகத்தில் பீடி, சிகரெட் விற்பனை செய்ய தனி உரிமம் – புது நடைமுறை விரைவில் அமல்!

தமிழகத்தில் இனி பீடி, சிகரெட் விற்பனை செய்த தனி உரிமம் பெற வேண்டும் எனவும், அந்த கடைகளில் வேறு பொருள்கள் விற்பனை செய்ய கூடாது என்ற புதிய நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது.

புதிய விதிமுறை:

உலகளவில் சீனாவிற்கு அடுத்தபடியான பீடி, சிகரெட் அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்கிறது. மேலும் இந்தியாவில் 20 கோடிக்கு அதிகமானோர் புகையிலையை பயன்படுத்துகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் 13 சதவீதம் புகையிலை மரணமாக இருக்கும். அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பீடி, சிகரெட் விற்பனைக்கு மட்டும் தனி உரிமம் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த 3 மணி நேரங்களுக்கு மிகவும் ஜாக்கிரதை மக்களே – இடி, மின்னலுடன் மழை!

அதே போல தமிழகத்திலும் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த அது போல நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வரைவு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்னதாக போடப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் பல லட்சம் பெட்டிக்கடைகள் இருக்கின்றன. அதில் சிறிய மளிகை கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய விதிமுறைகள்:
  • சிறுவர்களுக்கு பீடி, சிகரெட் விற்பனை செய்யப்படக்கூடாது.
  • இது குறித்த பலகைகள் கடைகளில் வைத்திருக்க வேண்டும்.
  • ஆனால் அது எல்லா கடைகளிலும் கடைபிடிக்கப்படவில்லை.
  • அதனால் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட இருக்கிறது. அதாவது பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் கடைகளில் கட்டுப்பாடுகள் அதிகம் ஆகும். மேலும் விதிகளை மீறினால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இதன் மூலம் சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் வராது என அவர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!