தமிழகத்தில் 98 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பணிமூப்பு – உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் 98 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பணிமூப்பு - உயர்நீதிமன்றதின்
தமிழகத்தில் 98 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பணிமூப்பு - உயர்நீதிமன்றதின்

தமிழகத்தில் 98 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பணிமூப்பு – உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் 98 உதவி ஆய்வாளர்களுக்கு பணி மூப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பணி மூப்பு:

தமிழகத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு 1100 உதவி ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் 1206 பணி நியமனத்திற்கான தகுதி பெற்றனர். இதில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலாக தேர்ந்தெடுக்க 98 பேருக்கு மட்டும் பணி வழங்கப்படாமல் இருந்து வந்தது. பல்வேறு கட்ட முடிவுகளுக்கு பிறகு கடந்த 1999ம் ஆண்டு அவர்களை சப் – இன்ஸ்பெக்டர்களாக நியமிக்க அரசு உத்தரவிட்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனையடுத்து இவர்கள் 2000ம் ஆண்டு பணியில் சேர்த்தனர். இந்நிலையில் 98 பேரும் கடந்த 2008ம் ஆண்டு பணிமூப்பு கோரி அரசுக்கு மனு அனுப்பினர். இந்த மனுவை அரசு நிராகரித்தது. இதனையடுத்து 20 பேர் பணி மூப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பணி மூப்பு வழங்க உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு – விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்!

தற்போது இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம், வழக்கில் பிரதிவாதிகளாக அரசு மற்றும் டி.ஜி.பி உள்ளனர். 1997- 98- ல் நியமிக்கப்பட்ட உதவி ஆய்வாளர்களிடம் கேட்காமல் உத்தரவு பிறப்பித்தது தவறும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 98 உதவு காவல் ஆய்வாளர்களும் ஏற்கனவே பணி மூப்பு கேட்க மாட்டோம் என்று உத்தரவாதம் வழங்கி உள்ளனர். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ஏற்க முடியாது.என்று பணி மூப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!