நவ.18 வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!
டெல்லியில் நவம்பர் 9ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
டெல்லியில் கடந்த வாரம் முதல் குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் பனிமூடடம் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக அதிக அளவில் சாலைகளில் புகைமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வு மற்றும் இயல்பு நிலை பாதித்துள்ளது. காற்று மாசுபாட்டின் காரணமாக குழந்தைகள் பாதிக்காத வகையிலும், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் பள்ளிகளுக்கு நவம்பர் 10 ஆம் தேதி வரை முன்னதாக விடுமுறை அறிவித்து டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது.
NHPC Apprentice பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு…Dont Miss it!
இந்நிலையில் புகைமூட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக தற்போது ஜனவரி மாதம் வழங்கப்படும் குளிர் கால விடுமுறையை மாற்றி அரசு அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி டெல்லியில் நவம்பர் 9ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவை அனைத்து பள்ளிகளும் பின்பற்றுமாறு மாநில பள்ளி கல்வித்துறை ஆனது அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.