மத்திய கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

0
மத்திய கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
மத்திய கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
மத்திய கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற 4-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான உதவித்தொகை:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு சார்பாக வருடந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2020-21 ஆண்டிற்கான உதவித்தொகை வழங்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 7 முதல் யோகா, இயற்கை மருத்துவ கலந்தாய்வு – இந்திய மருத்துவ துறை அறிவிப்பு!!

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,”மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு 2020-21 ஆண்டிற்கான உதவித்தொகை ரூபாய் 2 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை தலா 100 மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவர்களின் குடும்ப வருமானம் 2 லட்சத்திற்கு அதிகமானதாக இருக்ககூடாது. இந்த ஆண்டு புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பியூசி வகுப்புகள் தொடக்கம்!!

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்லூரிகளிலேயே வழங்க வேண்டும். விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு அந்தந்த கல்லூரிகள் வருகிற ஜனவரி 4-ஆம் தேதி முல் 15-ஆம் தேதி வரை அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி, விண்ணப்பங்களைப் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை 5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இது குறித்து விபரங்கள் அறிய 044-2855142 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!