ஜனவரி 7 முதல் யோகா, இயற்கை மருத்துவ கலந்தாய்வு – இந்திய மருத்துவ துறை அறிவிப்பு!!

0
ஜனவரி 7 முதல் யோகா, இயற்கை மருத்துவ கலந்தாய்வு - இந்திய மருத்துவ துறை அறிவிப்பு!!
ஜனவரி 7 முதல் யோகா, இயற்கை மருத்துவ கலந்தாய்வு - இந்திய மருத்துவ துறை அறிவிப்பு!!
ஜனவரி 7 முதல் யோகா, இயற்கை மருத்துவ கலந்தாய்வு – இந்திய மருத்துவ துறை அறிவிப்பு!!

தமிழக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வருகிற ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முதல் தொடங்குகிறது என இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவம்:

இந்திய மருத்துவமுறை மற்றும் ஓமியோபதி துறை கட்டுப்பாட்டில் சென்னை அறிஞர் அண்ணா அரசு இந்திய வளாகத்தில் ஒரு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமுறை கல்லூரி மற்றும் மற்ற பகுதிகளில் 17 தனியார் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு கல்லூரிகளில் 60 காலியிடங்களும், தனியார் கல்லூரிகளில் 1550 இடங்களும் உள்ளன. இந்த காலியிடங்களில் சேருவதற்கான இந்த ஆண்டு 2000 பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர். அதில் கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி 2002 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 10ஆம் தேதி இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் – சென்னை தலைமையகம் அறிவிப்பு!!

இந்நிலையில் சென்னை அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் வருகிற ஜனவரி 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை காலை 8-11 மற்றும் 12-3 மற்றும் 4-7 ஆகிய நேரங்களில் கலந்தாய்வு மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இந்த பட்டபடிப்பிற்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு- ஜனவரி 4 முதல் தொடக்கம்!!

இது குறித்து மேலும் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் இந்திய மருத்துவமுறை, ஓமியோபதி துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!