மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு- ஜனவரி 4 முதல் தொடக்கம்!!

0
மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு- ஜனவரி 4 முதல் தொடக்கம்!!
மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு- ஜனவரி 4 முதல் தொடக்கம்!!
மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு- ஜனவரி 4 முதல் தொடக்கம்!!

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், அதில் நிரப்பப்படாத காலி இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற ஜனவரி 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

மருத்துவ கலந்தாய்வு:

மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்குகிறது. கடந்த மாதம் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் நடைபெற்ற கலந்தாய்வில் முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

2,200 ஆயுதப்படை காவலர்கள் தேர்தல் பணிக்கு மாற்றம் – கமிஷனர் அறிவிப்பு!!

அதன்பின் நிவர் புயல் காரணமாக கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வருகிற ஜனவரி 4-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. அதில் ஏற்கனவே நடந்த முதல் கட்ட கலந்தாய்வில் காலியாக உள்ள மற்றும் முதற்கட்ட கலந்தாய்வில் அனுமதி கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராத மாணவர்களில் இடங்களை நிரப்புவதற்கு வருகிற 4-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

அரசுப்பள்ளி கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

மேலும் 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி நண்பகல் வரை அரசு இடஒதுக்கீடு இடங்களும், 11-ஆம் தேதி பிற்பகல் முதல் 13-ஆம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 148 இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!