தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு!

0
தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு!

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து மே மாதத்திற்கான 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவு:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் ஆனது டெல்லியில் நடைபெற்றது. தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சமீபத்தில் வினீத் குப்தா தலைமையில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 2.5 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம் ரூ.40,000/-

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 5 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். 2 மாதங்களில் 1.5 டி.எம் சி தண்ணீர் மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி நீர், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நீரையும் திறக்க உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திற்கு காவிரியில் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை அடிப்படையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!